வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் வேளையில் அமெரிக்காவும் ஜப்பானும் நேற்று கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
வடக்கு ஜப்பானில் நடைபெற்ற இந்த பீரங்கி வாகனப் போர் பயிற்சியில் சுமார் 300 ராணுவத்தினர் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா விடுத்த எச்சரிக்கையினை தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதற்றமான சொற் போர் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்தே வடக்கு வைப்பர் 2017 எனும் கூட்டு போர் பயிற்சியை அமெரிக்காவும் ஜப்பானும் கடந்த 10ம் திகதி ஆரம்பித்துள்ளன. ஜப்பானின் நில தற்காப்பு படையின் 1300 வீரர்களும் அமெரிக்க கடற்படையின் 2 ஆயிரம் வீரர்களும் பயிற்சி பெறும் வகையிலான இந்த கூட்டு போர் பயிற்சி வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று சுமார் 300 வீரர்கள் தரை வழி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டனர்.
Add Comment