169
சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கை பரிசீலிக்க குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் டெல்லியில் சீக்கியருக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது.
இதில் 250 வழக்குகளை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு 241 வழக்குகளை முடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
இதையடுத்து, இந்த வழக்குகளை முடிக்கலாமா என்பது குறித்து பரிசீலிக்க குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நேற்று நியமித்ததுடன் 3 மாதங்களில் விசாரணை அறிக்கையை அளிக்கவும் உத்தரவிட்டது. கலவர வழக்குகளில் 2 வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.
Spread the love