குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் 13 உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 10பேரின் நிலை கவலைக்கிடாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி தாக்குதல் – பலர் காயம்
Aug 17, 2017 @ 16:31
ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூவர் வீதியில் விழுந்து கிடைப்பதையும் சிலர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயுதமேந்திய நபர் ஓருவர் துப்பாக்கியுடன் உணவு விடுதியொன்றிற்குள் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர் என ஸ்பெயின் காவல்துறையினர் தெரிவித்துள்ள அதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்
உள்ளுர் புகையிர நிலையங்களை உடனடியாக மூடிவிடுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். கார்மோதிய இடத்தில் பொதுமக்கள் உணவுவிடுதிகள் போன்றவற்றிற்குள் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரிய சத்தமொன்று கேட்டது நாங்கள் அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி ஓடினோம் பலர் காயமடைந்துள்ளனர் என நினைக்கிறேன் படுபயங்கரமான நிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.