187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பார்சிலோனாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இரங்கல் வெளியிடுவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
ஸ்பெய்னின் பார்சிலோனா நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love