குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பின்லாந்தின் தென்மேற்கு நகரமான டேர்க்குவில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தாக்குதலில் இரண்டு பேர் பலியானதாகவும், எட்டுக்கும் ; மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு 2 – பின்லாந்து கத்திக்குத்து சம்பவம் மிகவும் பயங்கரமானதாக இருந்ததாக நேரில் கண்டவர் தெரிவிப்பு
Aug 18, 2017 @ 15:11
பின்லாந்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த சுவீடனை சேர்ந்த கென்ட் வென்சன் பாரிய வெள்ளை நிறக்கத்தியுடன் நபர் ஓருவர் அங்குமிங்கும் ஓடி பொதுமக்களை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார்.
அங்கு இடம்பெற்ற விடயங்கள் மிகவும் பயங்கரமானவையாக காணப்பட்டன. நாங்கள் அப்பகுதியில் அமர்ந்திருந்தோம் திடீரென பெண்மணியொருவர் அலறினார் அவருக்கு முன்னால் பாரிய வெள்ளைக்கத்தியுடன் நபர் ஒருவர் நிற்பதை பார்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதியில் எங்கும் குருதியாக காணப்பட்டது எனவும் ஓருவர் நிலத்தில் விழுந்து கிடப்பதை பார்த்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்லாந்து ஊடகங்கள் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் படங்களையும் உடல் ஓன்று வெள்ளை துணியால் போர்த்தப்பட்ட நிலையில் காணப்படும் படத்தினையும் வெளியிட்டுள்ளன
தாக்குதலில் ஈடுபட்ட மேலும் சிலர் இருக்க கூடும் அவர்களை தேடி வருகின்றோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பின்லாந்தில் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திய நபர் ஓருவர் காவல்துறையினரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்லாந்தின் தென்மேற்கு நகரமான டேர்க்குவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சத்தங்களை கேட்டதாகவும் ஓருவரின் சடலத்தை பார்த்துள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். செய்தியாளர் ஓருவரும் இதனை உறுதிசெய்துள்ளார்.
காவல்துறையினரும் இந்த சம்பவத்தை உறுதிசெய்துள்ளனர் -நகரத்தின் மையப்பகுதியிலிருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.