குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாகன விலை குறைப்பானது விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதனை உணர்த்துகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கான விலைகளை குறைத்துள்ளமை எதிர்கால தேர்தலுக்கான அறிகுறியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களுக்கான வரி குறைப்பானது கீழ் நிலையில் உள்ள மக்களுக்கு எவ்வித நன்மையையும் அளிக்காது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இணைய வரி குறைப்பு மக்களுக்கு ஓரளவு நலனை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களின் சமூர்த்தி கொடுப்பனவுகள் கூட வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் கீழ் நிலையில் வாழும் மக்களுக்கு எவ்வித நலன்களையும் வழங்கவில்லை எனவும் டலஸ் அழப்பெரும குறிப்பிட்டுள்ளார்.