குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகக் கிண்ண போட்டித் தொடரின் நேரடித் தகுதியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை ஈடுபட உள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்;ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் இலங்கை பங்கேற்க உள்ளது.
இந்த ஐந்து போட்டிகளைக் கொண்ட போட்டித் தொடரில் இரண்டு போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டியினால் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும்.
உலக கிரிக்கட் அணிகளின் தர வரிசையில் முதல் எட்டு இடங்களை வகிக்கும் நாடுகள் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்கின்றன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான தரப்படுத்தல் புள்ளிகளின் அடிப்படையில் இந்த தர வரிசை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
எவ்வாறெனினும், இலங்கை அணி, சிம்பாப்வே அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலம்பொருந்திய இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டுவது சாவலான விடயம் எனத் தெரிவிக்கப்படுகிறது.