குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச விசாரணை அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமற்றது என்பதனை இலங்கை உலக சமூகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதவான்கள் மற்றும் சட்டத்தரணிகளை கண்காணிப்பாளர்களாக இணைத்துக் கொள்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்தேச விசாரணைகளுக்கு இலங்கையின் அரசியல் சாசனம் அனுமதியளிக்காது என சுட்டிக்காட்டியுள்ள திலக் மாரப்பன சர்வதேச விசாரணைகள் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.