158
Graphic shows large earthquake logo over broken earth and Richter scale reading
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவின் மேற்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் கடலில் இருந்து 500 கி.மீட்டர் தொலைவில் இது உருவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியிடங்களில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love