159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்சியாவுக்கான கட்டளை தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு யாழ்.கோப்பாயில் உள்ள இந்திய இராணுவத்தின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்திய அமைதிப்படையினர் இலங்கை வந்திருந்த கால பகுதியில் இராச பாதை வீதியில் அமைந்துள்ள தோட்ட வெளி பகுதியில் 1987-10-18 ஆம் திகதி விடுதலைப்புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அவ்விடத்தில் 5 இந்திய படையினர் உயிரிழந்திருந்தனர்.11பேர் படுகாயமடைந்தனர்.விடுதலைப்புலி கள் தரப்பில் ஒருவர் வீரசாவு அடைந்திருந்தார்.
மோதல் சம்பவத்தினை அடுத்து இந்திய படையினரின் துப்பாக்கிகளும் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டன.
இவ்விடத்தில் உயிரிழந்த 5 இந்தியப்படையினரின் நினைவாக சமாதி அமைக்கப்பட்டு இருந்தது. குறித்த சமாதி அமைந்துள்ள பகுதியானது தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் அமைந்துள்ளது.
அந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சமாதி அமைந்துள்ள காணி உரிமையாளரை தொடர்பு கொண்ட இலங்கை இராணுவத்தினர் யாழ்.வரும் இந்திய இராணுவத்தினர் குறித்த சமாதிக்கு இன்றையதினம் சனிக்கிழமை அஞ்சலி செலுத்த உள்ளதாக கூறி , சிதைவடைந்திருந்த சமாதியினை புனரமைப்பு செய்தனர்.
Spread the love