உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உத்கல் விரைவு புகையிரதத்தின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 72 பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
எனினும் இது வரை உயிரிழப்பு பற்றிய முழுமையான தகவல்கள் பெறப்படவில்லை என தெரிவித்துள்ள இந்திய மத்திய புகையிரத அமைச்சர் சுரேஷ் பிரபு தன் மேற்பார்வையில் மீட்புப் பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
பூரியிலிருந்து ஹரித்வார் செல்லும் உத்கல் விரைவு புகையிரதம் முசாபர் நகரின் கத்தவ்லி புகையிர நிலையம் அருகே ; விபத்துக்குள்ளானது.
திடீரென பெரிய அளவில் அவசர பிரேக்கை போடப்பட்டதால் அதன் 14 பெட்டிகள் தடம்புரண்டதாக கூறப்படுகிறது,
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும், தான் நேரடியாக நிலைமைகளைக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் சுரேஷ் பிரபு ட்வீட் செய்துள்ளார்.