156
ராஜாங்க அமைச்சர்கள் சுயாதீனமாக செயற்படுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கத் தவறினால் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட ராஜாங்க அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகிய அமைச்சாகளை தவிர ஏனைய அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்களுக்கு தங்களது அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளையுடன் பூர்த்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love