ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச காவல்துறையினர் ஊடாக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு மற்றும் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகியவற்றை விலக்கிக் கொள்ளுமாறு கோரப்பட்ட மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த கோரிக்கையை பரிசீலத்த நீதிமன்றம் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பிடியாணை இன்றி கைது செய்யக் கூடிய குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் சந்தேகநபரான அவர், பிடியாணை உத்தரவை மீளப் பெறுமாறோ அல்லது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறோ கோரிக்கை விடுக்காமல், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சரணடைய வேண்டும் என்று நீதிபதி எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது