குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து முக்கிய நகரங்களை ஈராக்கிய படையினர் மீட்டுள்ளனர். டெல் அபார் எனப்படும், ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய நகரத்தை அண்டிய சிறு கிராமங்கள் பலவற்றை ஈராக்கிய படையினர் கைபற்றிற்யுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலையையும் கருத்திற் கொள்ளாது மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக டெல் அபார் காணப்படுகின்றது. இந்த நகரமானது பிரதானமாக ஷியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.