குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் கட்சி உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.
இந்தக் கூட்டம் விசேடமானது கிடையாது எனவும், வழமையான சந்திப்பு எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக சந்திப்பு நடத்தாத காரணத்தினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.