பிரான்சின் மார்செய் நகரில் நேற்றையதினம் வாகனத்தினால் மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதிவேகமாக வந்த கார் அடுத்தடுத்து 2 பேருந்து நிறுத்தங்களில் நின்ற பயணிகள் மீது மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்திருந்தார்.
காரை செலுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் இது தீவிரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து பொதுமக்கள் மீது வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.