178
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்ததை சீராய்வு செய்ய வலியுறுத்தி சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின்னரே ஜெயலலிதா காலமானார் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love