குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போகா ஹாராம் தீவிரவாதிகள் அதிகளவில் சிறுவர் தற்கொலைப் போராளிகளை பயன்படுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் இவ்வாறு அதிகளவில் சிறுவர் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 83 சிறுவர் சிறுமியர் தற்கொலைப் போராளிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகளவானவர்கள் சிறுமியர் எனவும் சுமார் 55 சிறுமியர் தற்கொலைப் போரளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போகோ ஹாராம் தீவிரவாத செயற்பாடுகளினால் சுமார் 20000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.