குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பல வருடங்களிற்கு பிரித்தானியா ஐரோப்பிய நீதிமன்றத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டிலேயே காணப்படும் என தெரேசா மே அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் நீதிவிவகாரங்கள் எவ்வாறு காணப்படும் என்பது குறித்த தனது புதிய நிலைப்பாடுகளை தெரிவிக்கும் விதத்தில் ஆவணமொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பல வருடங்களிற்கு பிரித்தானியா ஐரோப்பிய நீதி நீதிமன்றத்தின் கீழ் நேரடி கட்டுப்பாட்டிலேயே காணப்படும் எனவும் பிரித்தானியா , குடிவரவு உட்பட பல முக்கியமான விடயங்களில் அந்த நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தவேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்றம் அல்லது புதிய குழுவொன்றினை உருவாக்குவதன் மூலம் மாத்திரமே ஐரோப்பிய நீதிமன்றத்தின் அதிகாரத்திலிருந்து விடுபட முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்;டை வெளியிட்ட பின்னர் கருத்து வெளியிட்ட நீதியமைச்சர் டொமினிக் ராப் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஓன்றியத்தின் அதிஉயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் குறித்து பிரித்தானியா அவதானமாகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் பிணக்குகளிற்கு தீர்வினை காண்பது குறித்த விடயங்களிற்கான அணுகுமுறையை உருவாக்கு குறித்து பிரித்தானியா ஆக்கபூர்வமான பேச்சுக்களை மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதேவேளை புதிய ஆவணம், பிரித்தானியாவின் சட்டத்தை மீண்டும் ஏற்படுத்துவது என்ற தனது வாக்குறுதியிலிருந்து தெரேசா மே பின்வாங்கியுள்ளதை புலப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.