பீபீகாரில் 502 கோடி ரூபா அரசாங்க நிதி, பல்வேறு பெயர்களில் முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவிவிலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பீகாரில் அரசாங்க நிதி பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் ஒன்றின் வங்கி கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் வலியுறுத்தினார். மேலும், அவர் குறித்த நிறுவனத்தின் நிறுவனர் மனோரமா தேவியுடன் பாஜக தலைவர்கள் பல பேருக்கு தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டினார்.
இந்த ஊழல் வழக்கில், காவல்துறையினர் 5 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வங்கிகளில் செலுத்தப்பட்ட அரசாங்க பணத்தை அனைத்து மாவட்ட நீதிபதிகளும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பீகார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.