சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு¸ புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் விடுவிக்கபட்ட மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை உடனடியாக மீள் கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில்; நடைபெற்றது.
இந்த கலந்துறையாடலின் பயனாக விடுவிக்கபட்டு மீள்குடியேற்றம் நடைபெற்று வரும் பிரதேசங்களின் பாடசாலை உடனடியாக புனர் நிர்மானம் செய்வதற்கும்¸ தற்போது குறைபாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு தளபாடங்ளை உடனடியாக வழங்குவதற்கும் பாதிக்கபட்ட பாடசாலைகளை பார்வையிட்டு மேலும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குமான தீர்மானங்கள் எட்டபட்டுள்ளன.
விடுவிக்கபடாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இராணுவத்தின் அனுமதியுடன் விடுவிக்கபட்டு அந்த பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைள் முன் வைக்கபட்டுள்ளன எனவும் இதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்றபடியால் முழுமையான விபரங்களை கொழும்பு இராணுவ தலைமையகத்தின் கேணல் டி.சீ.சீ. ககேபல கேட்டுள்ளார் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு உயர் இராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்தை நடாத்தி அனுமதி கிடைத்தவுடன் அந்த பாடசாலைகளும் திருத்தப்பட்டு மாணவர்கள் முறையாக கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புகள் செய்துக் கொடுக்கப்படும் என வெர் தெரிவித்துள்ளார்.