குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பிற்கு பின்னர் பிரித்தானியாவிலிருந்து அதிகளவு ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் வெளியேறியுள்ளமை உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் வாக்கெடுப்பை தொடர்ந்து பெருமளவு ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் வெளியேறியுள்ளதால் நிகர குடிபெயர்வும் வீழ்ச்சி கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016 யூன் 23 ம் திகதி வாக்கெடுப்பிற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்திலிருந்து அதிகளவு ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் வெளியேறியுள்ளதும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோரே அந்த நாடுகளிலிருந்து வந்துள்ளதையும் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன
மேலும் சர்வதேச மாணவர்களின் இங்கிலாந்திற்கான வருகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஓன்றிய தொழிலாளர்கள் வெளியேறுவதால் பொருளாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இந்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் வின்ஸ்கேபிள் தெரிவித்துள்ளார்.
இந்த புள்ளிவிபரங்கள் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றன எனவும் ஐரோப்பிய பிரஜைகளிற்கு பிரித்தானியாவில்; இருப்பதற்கான உரிமையை தெரேசா மே அரசாங்கம் உறுதிசெய்ய மறுத்துள்ளதே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.