309
கிளிநொச்சி ஜெந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திருகனேசாணந்த மகாதேவ சுவாமிகள் இன்று (வியாழன்) நண்பகல் மகா சமாதி எய்தி உள்ளார்
கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் , சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்த இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும் தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது.
இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி ஜெந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்
Spread the love