குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்ற பின்னர் குடிவரவு குற்றங்களிற்காக ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் தடுத்துவைக்கப்படுவது பல பல மடங்காக அதிகரித்துள்ளது
2016இல் 3699 ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் குடிவரவு குற்றங்களிற்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.2015 இல் இந்த எண்ணிக்கை 2600 ஆக காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதேவேளை இந்த வருடம் பிரித்தானியாவில் தடுத்துவைக்கப்படும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்பதை இந்த ஆண்டின் முதற்காலாண்டு புள்ளிவிபரங்கள் புலப்படுத்தியுள்ளன
நாடாளுமன்ற கேள்வியொன்றிற்கு பதில் அளிக்கையில் குடிவரவு துறை அமைச்சர் இந்த புள்ளிவிபரங்களை சமர்பித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தை சேராத எவரும் அச்சப்படும் சூழ்நிலையை உருவாக்குவது குறித்து அரசாங்கம் உறுதியாகவுள்ளது என லிபரல் ஜனநாயக கட்சியின் உள்துறை விவகாரங்களிற்கான பேச்சாளர் எட் டேவே தெரிவித்துள்ளார்
எந்த நாகரீக அரசாங்கத்திலும் இந்த அச்சமூட்டும் தந்திரோபாயங்கள் காணப்படக்கூடாது சர்வதேச அளவில் இது எங்கள் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஐரோப்பிய ஓன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளை இது பாதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.