உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது சம்பந்தமான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பெரும்பான்மையுடன் பாராளுமன்றில நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்துள்ளதுடன் 44 பேர் வாக்களிப்பில் கலச்து கொள்ளவி0ல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இணைப்பு 2 – பாராளுமன்றம் ஒத்தி வைப்பு
Aug 25, 2017 @ 06:18
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்தச் சட்டமூலம் தொடர்பான சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிரணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட அமளியினைத் தொடர்ந்து பாராளுமன்றம் நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகிய வேளை திருத்தச் சட்டத்தை அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்தார்.
இதற்கு எதிப்பு தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணி கடுமையாக திருத்தங்களை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்தச் சட்டமூலம் வாக்களிப்பு இன்று:-
Aug 25, 2017 @ 04:18
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்களிப்பு பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் இந்த சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெற உள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் குறித்த சட்டமூலம் கடந்த 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததுடன், அதன்போது 27 திருத்தங்கள் உள்ளடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.