166
கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் இராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவச் சிப்பாய்கள் வாள்வெட்டுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் இருவரதும் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Spread the love