ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பில் 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கலாநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, தமிழகத் தொழிலதிபர் சிவசங்கரனை என்பவரை மிரட்டி, அவரின் ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, மாறன் சகோதரர்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.