178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் இன்றைய தினம் பேரணி இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்திய சாலை முன்பாக இன்று மாலை 3.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் வைத்திய சாலை வீதி வழியாக காங்கேசன்துறை வீதியை சென்றடைந்து அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் உள்ள மைதானத்தை சென்றடைந்தனர்.
குறித்த பேரணியில் தென்னிலங்கையை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தமிழ் மொழி பேச கூடியவர்கள் மிக சொற்ப அளவினரே கலந்து கொண்டனர் என்பதும் நோக்கத்தக்கது
Spread the love