குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லிபிய தலைவர் கேர்ணல் கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டது இதுவரையில் லிபியா மக்களை பொறுத்தவரை பெரும்துயரமாகவே காணப்படுகின்றது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் லிபியாவின் எதிர்காலம் குறித்து அளவுக்கதிகமான நம்பிக்கையுடன் இருந்துவிட்டோம் எனவும் 2014 தேர்தல்கள் நிலைமையை இன்னும் மோசமானதாக்கிவிட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
லிபியா இரு தரப்புகளிற்கு மத்தியில் பிளவுண்டு காணப்படுகின்றது என கருதுவது தவறு எனவும் உண்மையில் அந்த நாடு பல சக்திகளின் பிடியில் சிக்குண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.
கடாபி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு ஆறு வருடங்களாகிவிட்ட போதிலும் அந்த நாட்டில் அரசாங்கத்தின் அதிகாரம் முற்றாக சிதைவடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ள பொறிஸ் ஜோன்சன் லிபியா உள்நாட்டு போரில் சிக்குண்டுள்ளது என குறிப்பிடுவது தவறு எனவும் அது உண்மையில் அது பெரும் அராஜகம் சட்டமின்மையின் பிடியில் சிக்குண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்