குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்துஆசிகளை பெற்றுக்கொண்டார்.
இலங்கை கடற்படையின் 22ஆவது தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அவரது அனைவி திருணி சின்னையா மற்றும் சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் இன்று கண்டியிலுள்ள மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் ஆகியோரிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு அங்குள்ள விருந்தினா் பதிவேட்டிலும் ஓப்பம் இட்ட கடற்படைத்தளபதி, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
கடலோரப் பாதுகாப்புக்காக பல கப்பல்களை ,ந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளோம் எனவும் இக்கப்பல்களைக் கொள்வனவு செய்வதன் நோக்கம் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கேயாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் ஒரு வருடத்தை தமக்குத் தாருங்கள் எனவும் அதற்குள் கடல் வழியாக இடம்பெறும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் ,ந்திய மீனவர்கள் அவர்களது எல்லை தெரியாததாலேயே எல்லைமீறி மீன் பிடிக்கின்றார்கள் எனவும் எனவே, அவர்களது கடல் எல்லையைச் சரியாக காண்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா மேலும் தெரிவித்துள்ளார்.