187
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முகமாலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். புதிதாக மீள் குடியேற்றம் செய்த இடத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது மர்மபொருள் ஒன்று வெடித்ததில் இருவரும் காயமடைந்துள்ளனா்
காயமடைந்த இருவரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றி பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது அங்கு நோயாளா் காவு வண்டி இல்லாததன் காரணமாக மனிதநேய கண்ணவெடி அகற்றும் பிரிவின் வானத்தில் ஏற்றி யாழ் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
Spread the love