பெல்ஜித்தின் பிரசெல்ஸ் நகரில் காவல்துறையினரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்ட நபர் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் பிரசெல்ஸில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திய இனந்தெரியாத நபர் பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலின் போது பொதுமக்கள எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என எனவும் காவல்துறையினரின் துப்பாக்கிசூட்டில் காயமடைந்த தாக்குதலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புகள் குறைவு என தெரிவித்துள்ள காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
Spread the love
Add Comment