குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பெ தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்;க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு இறுதி தீர்வுத் திட்டமொன்றை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில்இ சட்ட மா அதிபரின் ஊடாக அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மருத்துவம் கற்பதற்கான அடிப்படை தகமைகள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.