சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலியாவில் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் செயற்படும் அரசிற்கெதிராக அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக ஆபிரிக்க யூனியன் கூட்டுப்படைகள் அமரிக்க ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சோமாலிய தலைநகர் மொகடி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று, அப்பகுதியில் கூட்டுப்படையினர் டேமற்கொண்ட தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் தீவிவாதிகள் அல்ல எனவும் கொல்லப்பட்ட யாரும் சாதாரண பொதுமக்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரும், அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். மேலும் கொல்லப்பட்ட பத்து பேரில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.