இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினவு அரச மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக குறித்த மருத்துவமனையில் மருந்துகள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையாக பாதிகப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது குழந்தைகளின் உயிரிழப்புக்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணம் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.