150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எவ்வித அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினரிடம் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையுண்டா என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்தக் கேள்விக்கு பதிலளித்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love