165
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சி பதிவுகள் நாளை திங்கட்கிழமை நீதாயவிளக்கம் ( ரயலட் பார்) முன்னிலையில் ஆரம்பமாக உள்ளது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம் (ரயலட் பார்) முறைமையில் நடைபெற்று வருகின்றது.
கடந்த 4ஆம் திகதியுடன் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி பதிவுகள் முடிவுறுத்தபடுவதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் தெரிவித்தார். அதனை அடுத்து எதிரிகள் தரப்பில் சாட்சியங்களை நெறிப்படுத்த போவதாக எதிரி தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்
அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுக்காக நாளைய தினம் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து 29ஆம் , 30 மற்றும் 31ஆம் திகதிகளிலும் , செப்ரெம்பர் மாதம் 4ஆம் , 11ஆம் , 12ஆம் , 13ஆம் , 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகள் எதிரி தரப்பு சாட்சி பதிவுக்காக மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.
Spread the love