150
தான்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3லட்சத்து 20 ஆயிரம் அகதிகளுக்கு உணவளிக்க உலக நாடுகளிடம் ஐ.நா. உதவி கோரியுள்ளது.
நிதிஉதவிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் விளைவாக வடமேற்கு தான்சானியாவில் வாழும அகதிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அகதிகளின் உணவு மற்றும் சத்துணவுத் தேவையை அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இதற்காக 23.6 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுகிறது எனவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த அகதிகள் பெரும்பாலும் புருண்டி மற்றும் காங்கோவிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love