குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பாகவே அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதற்காக கொழும்பு பிரதான நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் சுமார் 35 மில்லியன் ரூபா லஞ்சம் வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் நிசாங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.