குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (28) பத்து மணிக்கு ஆரம்பமாகி ஒரு மணி வரை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இணைத் தலைவா்களான வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
கல்வி,சுகாதாரம், வீடமைப்பு, கண்ணி வெடி அகற்றல்,காணி, போக்குவரத்து,அனர்த்த முகாமைத்துவம், மீன்பிடி, ,கூட்டுறவு, சமூர்த்தி, உள்ளிட்ட 12 விடயங்கள் ஆராயப்பட்டதோடு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல்,வீதி, விவசாயம்,கால்நடை, உள்ளுராட்சி, அடங்கலாக 13 விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை எனவும், மீண்டும் அதே விடயம் அடுத்த ஒருங்கிணைப்பபுக் குழுக் கூட்டங்களில் பேசப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது எனவும் கலந்துகொண்ட மக்கள் ஊடகவியலாளா்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனா்.
அத்தோடு கூட்டத்தின் நிகழ்ச்சி 25 விடயங்கள் ஆராயப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையலி் 12 விடயங்களுடன் கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த விடயங்கள் தொடா்பில் தேவைகளையும் குறைபாடுகளையும் தெரிவிக்க வருகை தந்த மக்கள் பிரநிதிகளுக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதுடன் குறித்த விடயங்கள் தொடர்பில் தங்களது திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்க ஆயத்தமாக வந்த திணைக்கள தலைவா்களும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனா்.
எனவே நீண்ட கால இடைவெளிக்கு ஒரு முறை இடம்பெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் இயலுமான வரை எல்லா விடயங்களும் ஆராயப்பட்டு மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு அவா்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்
இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினா்களான சுமந்திரன், வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், குணசீலன் மாகாண சபை உறுப்பினா்களான தவநாதன், அரியரத்தினம், பசுபதிபிள்ளை மற்றும் மாவட்ட அரச அதிபா் சுந்திரம் அருமைநாயகம் பிரதேச செயலாளா்கள் திணைக்களங்களின் தலைவா்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிள் என பலா் கலந்துகொண்டனா்