142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மண்டைதீவு கடற்பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற படகு விபத்தில் ஆறு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உயர்தர பரீட்சையில் எழுதும் மாணவர்கள் இன்றைய தினம் மண்டைதீவு கடற்கரைக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கடற்கரையில் , கட்டி வைக்கப்பட்டு இருந்த மீன் பிடி படகு ஒன்றினை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற வேளை படகு விபத்துக்கு உள்ளானதாகவும் , அதன் போது படகில் இருந்த 7 பேரில் ஒருவர் மாத்திரம் நீதி கரை சேர்ந்து உள்ளார் ஏனைய ஆறு பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கபப்ட்டு உள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் கொக்குவில் , நல்லூர் மற்றும் யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் விபரம் – யாழ்.பரியோவான் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன் , லிங்கநாதன் ரஜீவ் மற்றும் ஜெயசாந்த் தினேஸ் கொக்குவில் இந்து மாணவனான தேவகுமார் தனுரதன் , பெரியபுலம் மகா வித்தியாலயம் கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ்.மத்திய கல்லூரி மாணவன் தனுஷன் ஆகிய உயிரிழந்தவர்களாவார்கள்.
Spread the love