153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உரிய தீர்வுத்திட்டம் வழங்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தீர்வுத் திட்டமொன்றை வழங்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தனது தீர்மானத்தை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love