இது மாகாண சபையோ, பாராளுமன்றமோ அல்ல – முகாமையாளா்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
தென்னை பயிர்ச்செய்கை சபையின முகாமையாளரை அடித்துக் கலைக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் கிளிநொச்சி உறுப்பினா் ப. அரியரத்தினம் இன்றைய கிளி நொச்சி மாவட்ட அபிவருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவித்தனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் அப்படி செய்வதற்கு இது மாகாண சபையோ, அல்லது பாராளுமன்றமோ அல்ல எனத் தெரிவித்தாா்.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிாிவில் உள்ள கரந்தாய் காணி விடயம் தொடர்பில் தென்னை பயிர் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளா் வைகுந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் சிறிதரன், மாகாண சபை உறுப்பினா்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் போதே அரியரத்தினம் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
கரந்தாய் கிராமத்தில் ஒரு பகுதியில் மக்கள் குடியிருக்கும் காணி எல்எல்ஆர்சி நிலம் எனவும் எல்எல்ஆர்சி அதனை தென்னை பயிர்செய்கை சபைக்கு வழங்கியுள்ளது எனவும் எனவே அந்த காணிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களின் பிரச்சினைகனை என்னால் தீர்க்க முடியாது அது கொழும் மட்டத்தில் அமைச்சர் மற்றும் தென்னை பயிர்செய்கை சபையின் தலைவா் ஆகியோராலேயே தீர்க்க முடியும் எனவும் அதன் பிராந்திய முகாமையாளா் குறிப்பிட்டாா்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் குறித்த பிரச்சினை தொடர்பில் கொழும்புக்கு தவறான தகவலை வழங்கியது பிராந்திய முகாமையாளா் எனவும் அதன் காரணமானகவே பிரச்சினைகளை தீர்கக முடியாதிருப்பதாக குற்றம் சாட்டினாா். இதன் போது இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களின் போது தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர்கள் வைகுந்தன் இணைத் தலைவா்களை நோக்கி தயவு செய்து எனது கருத்தை கேளுங்கள், நான் பேசிய பின் பேசுங்கள், என்னை பேச விடுங்கள் போன்ற வார்த்தை பிரயோகங்களை முன்வைத்தாா்.
இதன் தொடா்ச்சியாகவே அரியரத்தினம் தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர்கள் வைகுந்தனை சுட்டிக்காட்டி அவரை அடித்து களைக்க வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த வைகுந்தன் இது மாகாணசபையோ, பாராளுமன்றமோ அல்ல எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் கோபமடைந்த மாகாண சபை உறுப்பினா் தவநாதன் குறித்த உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யவேண்டும் என தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்றாா் அதற்கு இணைத் தலைவா் முதலமைச்சர் மறுப்புத் தெரிவித்துவிட்டாா்.
இதன் பின்னா் கூட்டத்திற்கு வெளியே கருத்து தெரிவித்த தென்னை பயிர்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர்கள் வைகுந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கரந்தாய் காணி விடயத்தை அரசியலாக பயன்படுத்தியதன் விளைவே குறித்த பிரச்சினையை தீர்க்க முடியாதிருப்பதாகவும், அவ்வாறிருந்தும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமை்சசர் நவீன் திசாநாயக்கவுடன் கரந்தாய் காணி விடயம் சம்மந்தமான கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது அங்கு நான் பாராளுமன்ற உறுப்பினாிடம் அவரின் காதோரம் அமைச்சரிடம் கூறுங்கள் என தெரிவித்தேன் யெஸ் யெஸ் என்று சொன்னவா் அங்கு எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக இங்கு வந்து எங்களை நோக்கி குற்றம் சுமத்துகின்றாா். எனக் குறிப்பிட்டாா். மாவட்ட அரச அதிபரின் கடித்திற்கு மதிபளித்தே கூட்டத்திற்கு சமூகம் அளித்ததாகவும் இவ்வாறு அரச உத்தியோகத்தர்களை அவமதிக்கும் நிலை உருவாகும் ஏற்படும் என்றால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களுக்கு சமூகமளிக்காதிருப்பதே நல்லது என்றும் தெரிவித்தாா்.