குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இடதுசாரி அரசியல்வாதிகளை கொலை செய்ய திட்மிட்டிருந்த சந்தேக நபர்களை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குடிவரவு குடியகழ்வு தொடர்பில் இடதுசாரி அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் நிலைப்பாடு தொடர்பில் எதிர்ப்பு கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளன. ஜெர்மனியின் குடிவரவு கொள்கை நாட்டை பாதக நிலைக்கு தள்ளும் என இந்த சந்தேக நபர்கள் கருதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடதுசாரி அரசியல்வாதிகளை மடக்கிப் பிடித்து கொலை செய்ய இந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.