239
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அகதிகள் பிரச்சினை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு ஒன்றை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
ச்சாட், நைகர் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த நாடுகளின் ஊடாகவே அதிகளவான ஆபிரிக்க அகதிகள் ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன், இத்தாலி, ஸ்பெய்ன் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Spread the love