குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல், மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் உள்ளிட்ட அமைப்புக்கள் 20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன் 20ம் திருத்தச் சட்டம் வாக்காளர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே வெறுமனே பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் இந்த திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பெபரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, 20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் ஏழு மனுக்களை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.