198
லஞ்சம் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபர் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. பாணந்துறை பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
2008ம் ஆண்டில் தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்ப்பிற்காக 25, 000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தி அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைகளின் போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, இவ்வாறு குறித்த முன்னாள் அதிபருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love