குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஈரானின் இராணுவ முகாம்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அணுவாயுத கண்காணிப்பாளர் ஒருவரை அனுப்பி வைக்க வேண்டுமென அமெரிக்கா கோரியிருந்தது.
அத்துடன் ஆறு உலகின் பலம்பொருந்திய நாடுகளும் ஈரானும் அணுத் திட்டம் தொடர்பில் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கையை திருத்தி அமைக்கப்பட வேண்டுமென அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும்; தடை செய்யப்பட்ட அணுத் திட்டங்களை ஈரான் முன்னெடுக்கவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பாளர் ஒருவரை, ஈரானுக்கு அனுப்பி பரிசோதனை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலேய் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இவ்வாறு அணு உலைகளை கண்காணிப்பதற்கு ஒரு போதும் அனுமதியளிக்கப்படாது எனவும், அது வெறும் கனவே எனவும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.