தொலைவில் இருந்து தொடர்பு கிடைக்குதோ இல்லையோ வீட்டில் இருந்தபடி தொலைத் தொடர்பு கோபுரங்களைப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு தொலைத் தொடர்பு கோபுரங்கள் யாழில் ஒவ்வொருவரின் வீட்டுவாசலுக்கு வந்துவிட்டது. மக்கள் குடியிருப்பு அற்ற பிரதேசத்தில் தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கம்பனிகள் இதனை கவனத்தில் எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மக்கள் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளிப் பகுதியில் இந்த கோபுரங்களை அமைத்தால் நல்லது.
தொலைத்தொடர்பு சம்பந்தமாக யாழில் இயங்கும் சிறீலங்கா ரெலிக்கொம் மற்றும் டயலொக் நிறுவனத்துக்கு சென்று வினாவிய போது ரெலிக்கொம் சொன்னது தாங்கள் கோபுரங்கள் ஒன்றும் அமைக்கவி;ல்லை. கேபிலில் தான் அலைவரிசை செல்கிறது. ஆனாலும் தொலைத் தொடர்பு கோபுரம் அமைத்திருக்கும் நிறுவனங்களுடன் பேசி வருகின்றோம் அனுமதி கிடைத்தால் கோபுரங்கள் மூலமாக எமது சேவையை தொடரவுள்ளோம் என்று சொன்னது. டயலொக் நிறுவனம் எதுவும் பேசமறுத்துவிட்டது.
தொலைத் தொடர்புகோபுரம் அமைப்பது தொடர்பாக சில பிரதேச மக்களிடம் அனுமதி எடுக்கவில்லை என்று மக்கள் இந்த நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்த கோபுரங்களை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நிறுவுவதால் மக்கள் பலநோய்களுக்கு ஆளாகி வருவதாக சூழலியலாளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்ற போதும் மக்கள் குடியிருப்பு பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கான அனுமதியை பிரதேச சபையினர் வழங்கி வருகின்றனர். இதனை சாட்டாக வைத்துக் கொண்டு தனியார் காணிகளை 10 வருடங்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் படி குத்தகைக்கு எடுத்து கோபுரத்தை நிறுவியுள்ளனர்.
செல் போன்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. முதலில் ஒரே ஒரு செல் போன் வைத்திருந்தோம், பின்னர் காலப் போக்கில் இரண்டு செல் போன்களை பயன்படுத்தத் தொடங்கி இப்போது ஒரே செல் போன்களில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தும் இரண்டு செல் போன்களைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் செல் போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்கள் அறிய நாட்டமில்லாமல் இருப்பதை சாட்டாக வைத்துக் கொண்டு கோபுரத்தை நிறுவி வருகின்றனர். நல்லூர் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதியில் செல் போன் கோபுரம் ஒன்றை மக்கள் அனுமதியின்றி நல்லூர் பிரதேச சபையின் அனுமதியுடன் அமைக்க எடுத்த நடவடிக்கை அண்மையில் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதேபோல் ஏனைய இடங்களிலும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தால் இன்று யாழ் மாவட்டத்தில் இவ்வளவு கோபுரங்கள் மக்கள் குடிமனைகளின் மத்தியில் எழுப்பியிருக்க வாய்ப்பிருக்காமல் போயிருக்கும்.
கோபுரங்களில் இருந்து மின் காந்த அலைகள் மற்றும் கதிரியக்கம் வெளிபடுகிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த கதிரியக்கத்தின் தாக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, வெளவால் தேனீக்கள், குருவிகள் வண்ணத்துப்பூச்சி மைனா போன்ற பறவைகள் இனம்அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சினால் மனிதர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சர்வேதேச அளவில் ஆய்வுகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 9 ஆண்டுகாளாகவே இது தொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளன.
கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை கணிசமான அளவு குறைத்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் கவனிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்று தெரியாமல் இருக்கிறது. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை அன்ரனாக்களை, குறைந்த பட்சம் 30 மீ . சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம் மக்கள் குடியிருப்புகள் பாடசாலைகள ;மருத்துவமனைகள் போன்ற இடங்களில் கோபுரங்கள் நிறுவுவதை தடை செய்ய வேண்டும். 500 மீட்டர் சுற்றளவுக்குள் கோபுரங்கள் நிறுவ தடை விதிக்க வேண்டும். கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன்,அதை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்கவேண்டும்.
கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளையத்துக்குள்ளே வசித்து வருபவர்களுக்கு புற்றுநோய்; மலட்டுத்தன்மை செவிட்டுத் தன்மை தலைவலி, தூக்கமின்மை, மயக்கம் உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெண்கள் ஆகியோரை எளிதில் தாக்கி இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், மூளைபாதிப்பு, வலிப்பு உயிருக்கு அச்சுறுத்தலான மூளை கட்டி வரை பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அலை ஈர்ப்பிகள் உமிழும் கதிர்வீச்சால் மூளையின் பல செயற்பாடுகள் பாதிக்கப்படுகிறது. கதிர்வீச்சால் நரம்புகளில் செய்திகளை காவிச் செல்லுகின்ற மின்துடிப்புகளை இடையூறு செய்கிறது. அத்தோடு மூளையில் உள்ள குரதி மயிர்க் குழாய்களின் மெல்லிய அகவணிக் கலங்களைச் சிதைத்து இரத்தத்தில் உள்ள நஞ்சுகளை தங்குதடையின்றி மூளையில் கலக்கவும் வழிசெய்கிறது. இவற்றின் விளைவாக தலைவலி நித்திரையின்மை ஞாபகக் குறைபாடு போன்றவைகளுடன் மூளையிலும் காதிலும் கட்டிகளும் ஏற்படுகின்றன. உடற்கலங்களை சூடுபண்ணி உடலின் பாதுகாப்புப் பொறிமுறையைத் தொழிற்படாதவாறு தடை செய்வதாகவும் தோலைச் சேதப்படுத்தி வயதுக்கு மீறிய முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதிகளவில் கதிர்வீச்சுக்கு ஆளாகிவரும் இன்றைய இளம் தலைமுறை பற்றி மருத்துவ உலகு கவலை கொண்டுள்ளது. குழந்தைகளின் மெல்லிய மண்டையோடு கதிர்வீச்சைத் தடுக்க பலமின்றி ஆழமாக ஊடுருவ அனுமதிக்கின்றன. மூளையிலும் நரம்பு இழையங்களிலும் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருப்பதால் கதிர்கள் அவற்றின் டீ.என்.ஏ (D.N.A)இழைகளைச் சேதமாக்குவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. இது புற்றுநோய் வரை இட்டுச் செல்லும்.
திறந்த தடங்கல் அற்ற வெளியில் 2ஜீ அலைவரிசை 35 கி.மீ வரையில் பரவும், ஆனால் 10 கி.மீக்கு அப்பால் மெல்ல வலுவிழந்து, தொடர்பு நிலையாக இருக்காது, எனவே 10 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் என இருக்க வேண்டும், மேலும் கட்டிடங்கள், மரங்கள் ஆகியவை அலை வரிசையை கிரகித்து வலுவிழக்க செய்யும் என்பதால் நகரப் பகுதியில் 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரு கோபுரம் அமைக்கலாம். ஒவ்வொரு கோபுரத்திலும் 120 டிகிரி கோணத்தில் மூன்று அலை பரப்பி வட்டுகள (Antenna) வைக்கப்படும், இதனால் கோபுரத்தில் இருந்து சுற்றிலும் பரவும் அலைவரிசை அறுங்கோண வடிவில் பரவும் எனக் கண்டு பிடித்துள்ளார்கள்,
ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு கோபுரங்களை அமைத்தன, 5 கி.மீ சுற்றளவுக்கு ஒரே கோபுரத்தின் மூலம் கவரேஜ் வழங்க முடியும்,ஆனால் நிறுவனங்கள் தமக்கென்று தனிய கோபுரங்களை நிறுவினர். இதனால் யாழில் அதிகரித்து கோபுரங்கள் காணப்படுவதோடு ஒரு கி.மீருக்கு ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இதுதான் அதிகளவு பாதிப்பை உண்டு பண்ணுகிறது.