150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் ஒக்ரோபர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் புதுடெல்லியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.
எட்கா உடன்படிக்கை தொடர்பில் அண்மையில் இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
அடுத்த ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னரே உடன்படிக்கையின் முன்னேற்றம் குறித்த தகவல்களை வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love